-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
குறைமாத சிசுவாகப் பிரசவிக்கப்பட்ட நிலையில் கடந்த 5 மாதங்களாக தீவிர கண்காணிப்புப் பிரிவில் பராமரிக்கப்பட்டு வந்த ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்று செவ்வாய்க்கிழமை உயிipழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
செங்கலடி ரமேஷ்புரத்தைச் சேர்ந்த இளம் தம்பதியினருக்கு முதற் குழந்தையாக இக்குழந்தை குறைமாதத்தில் பிரசவிக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பராமரிக்கப்பட்டு வந்தது.
இக்குழந்தையின் தாய்க்கு குழந்தை உயிரிழந்த தினத்தன்று 25 வது பிறந்த தினம்.
இந்த நிகழ்வும் அக்குடும்பத்தினரை மேலும் சோகத்திலாழ்த்தியுள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் மிகக் கஸ்டமான நிலையை சமாளித்தே கடந்த 5 மாதங்களுக்கு மேலாக குழந்தையை அக்குழந்தையின் தாய் வைத்தியசாலையில் தங்கியிருந்து பராமரித்து வந்துள்ளார்.
அதனால் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க குழந்தையின் தந்தை கடன்பட்டு மத்திய கிழக்கு நாட்டுக்கு தொழில் வாய்ப்புப் பெற்றுச் சென்றுள்ளார். இந்நிலையிலேயே கடைசியில் குழந்தையும் உயிரிழந்துள்ளது.
இதேவேளை குழந்தையின் பெற்றோர் வசிக்கும் கிராமம் தற்போதைய அடைமழை காரணமாக வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.
அங்கு வீடுகளில் வெள்ளம் நிரம்பி மக்களது இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
