சைபீரியாவில் பனி மூடிய வனப்பகுதியில் 46,000 ஆண்டுகள் பழமையான புழு இனத்தை விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வின் போது கண்டுபிடித்தனர்.
விஞ்ஞானிகளின் கூற்றுப்படிஇ இந்த புழு யானைகளைப் போன்ற கம்பளி மாமத்கள் வாழ்ந்த ப்ளீஸ்டோசீன் சகாப்தத்தின் கடைசி பாதியில் இருந்த ஒரு விலங்கு இனமாகும்.
இந்த உறங்கும் புழுக்களுக்கு விஞ்ஞானிகளால் தண்ணீர் மற்றும் உணவு வழங்கப்பட்டது, அதன் பிறகு அவை உறக்கநிலையிலிருந்து வெளியே வந்து விழித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த புழுக்களுக்கு விஞ்ஞானிகள் காலத்தை கடந்து செல்லக்கூடிய அற்புதமான புழுக்கள் என்று பெயரிட்டுள்ளனர்.










