தெய்வேந்திர முனை பகுதியில் பல நாள் மீன்பிடி படகு மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ஹெரோய்ன் போதை பொருள் இன்று ஞாயிற்று கிழமை கைப்பற்றப்பட்டடுள்ளதுடன் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
4000 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 200 கிலோ கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருட்கள் குறித்த படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் இலங்கை கடற்படையின் புலனாய்வுப் பிரிவினரும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகமும் இணைந்து மேற்கொண்ட ஆழ்கடல் நடவடிக்கையின் போது இவை கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகமும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.