-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளுடன் 5 பேர் இன்று புதன் கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன் போது பரந்தன் பகுதியில் வைத்து ஒருவரும் முழங்காவில் பகுதியில் வைத்து நால்வருமாக 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்கர் தலைமையில் இயங்கும் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவின் தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு இணைந்து நடத்திய சுற்றிவளைப்பின் போது இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் போது சந்தேக நபர்களிடமிருந்து 40 ஆயிரம் போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தே நபர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.