குருநாகல் பகுதியில் தனது, நான்கு வயது மகளை தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் சிறுமியின் தாயும், தாயின் சட்டவிரோதமான கணவனும் கைது செய்யப்பட்டுள்ளனர் என தொரட்டியாவ பொலிஸார் தெரிவித்தனர்.
அலகொல்தெனிய மோடர்வத்த பிரதேசத்தைச் சேர்ந்த சட்ட விரோத தம்பதிகளே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வீட்டினுள் வைத்து சிறுமியின் மீது பல நாட்களாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இந்த தாக்குதலில் சிறுமியின் முகம், முதுகு மற்றும் கை கால்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன் அவரது கண் பகுதி சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அயலவர்கள் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபரான தாயாருக்கும் தவறான கணவணுக்கும் எட்டு மாதக் குழந்தையொன்று இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
\
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்





