மொனராகலை பகுதியில் தனது 4 மாத மகளுக்கு கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் அச்சிசுவின் தந்தை நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
மொனராகலையைச் சேர்ந்த சிறிகல மொனரகெலேவத்தை (உடகோட்டாச) பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய தந்தையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மெலும் தெரியவருகையில்,
குழந்தையின் தாய் நேற்று காலை குழந்தையை பார்த்து கொள்வதற்காக கணவனிடம் விட்டு வீட்டை விட்டு வெளியேறினார். சிறிது தூரம் சென்றதும் குழந்தை ஓயாமல் அழும் சத்தம் கேட்டு வீடு திரும்பிய அவர், சிசுவின் தந்தை தரையில் அமர்ந்து குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு பாலியல் வன்கொடுமை செய்வதை பார்த்துள்ளார்.
தொடர்ந்து மனைவி அவரைத் தாக்கியதுடன் குழந்தையை தூக்கிச் சென்று மொனராகலை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
சந்தேக நபரை கைது செய்த பொலிஸார் மொனராகலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
குறித்த சிசு மருத்துவ பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.