5 நிமிடங்களுக்குள் 150 பொது அறிவு வினாக்களுக்கு பதிலளித்து சோழன் உலக சாதனை படைக்கும் முயற்சி மட்டக்களப்பு கிறீன்கார்டின் விடுதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் இடம்பெற்றது.
சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம், பியுபிள் ஹெல்ப்பிங் பௌண்டேசன், கதிரவன் சமூக அபிவிருத்தி நிறுவனம் இணைந்து நடத்திய இந்நிகழ்வில் பாஸ்கரன் ஷஸ்வின் என்ற சிறுவனே சோழன் உலக சாதனை படைத்துள்ளார்.
குறித்த சிறுவன் 4 நிமிடம் 15 செக்கன்களில் 150 பொது அறிவு கேள்விகளுக்கு பதில் வழங்கி சோழன் உலக சாதனை படைத்துள்ளார்.
கதிரவன் சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் த.இன்பராசா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக சமூக சேவைகள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் உ.சிவராசா கலந்துகொண்டார்.
மேலும் சிறப்பு விருந்தினராக புதிய சந்தர்ப்பங்கள் அமைப்பின் பணிப்பாளரும் பாடசாலை அதிபருமான சா.சுதாகரன், கதிரவன் சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் ஆலோசகர் அ.குலேந்திரராசா, மோசஸ் ஜேசுதாசன்(லங்கா லீமிங் சென்டர், கிராண்), கௌரவ விருந்தினர்களாக மட்/புனித மிக்கேல் கல்லூரி ஆரம்பப் பிரிவு பிரதி அதிபர் எஸ்.எஸ்.றெனோன் டெசி ஸ்பெக், மட்/சென்மேரிஸ் சர்வதேச பாடசாலை அதிபர் திருமதி.ராஜினி பிரான்ஸ், சிறப்பு நடுவர்களாக சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் மட்டக்களப்பு கிளை தலைவர் மட்டுநகர் சிவ வரதகரன், சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் செயற்குழு உறுப்பினர் கவிஞர் அ.தனுராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.