நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் பலத்த மழை பெய்து வருவதால், ஆறு மாவட்டங்களில் உள்ள 36 பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்லை மற்றும் ஹப்புத்தளை பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகள், கண்டி மாவட்டத்தில் யட்டிநுவர, உடுநுவர மற்றும் உடதும்பர பிரதேச செயலக பிரிவுகளுக்கும், தும்பனை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், எஹலியகொட, கொலன்னா மற்றும் பலாங்கொடை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்டத்தில் கலிகமுவ, மாவனெல்ல, யட்டியந்தோட்டை, அரநாயக்க, புலத்கொஹுபிட்டிய, வரக்காபொல பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகள், குருநாகல் மாவட்டத்தில் பொல்கஹவெல, மாத்தறை மாவட்டத்தில் மாலிம்பட சாரஸ்ஸ, கொட்டாபொல பிடபெத்தர, ஹக்லிபிட்டிய, கம்புருபிட்டிய ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தில் கிரியெல்ல, கஹவத்த, அயகம, பெல்மடுல்ல, நிவித்திகல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதல் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.