கடுவலை பகுதியில் டயர்களை திருடிய அலுவலகத்தின் ஊழியர்கள் 3 பேர் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
நவம்பர் 27ஆம் திகதி முதல் டிசம்பர் 3ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கடுவலை மாநகர சபையின் அதுருகிரிய வல்கம உப காரியாலயத்தின் களஞ்சியசாலையிலேயே இருபத்தி மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான 34 டயர்கள் திருடப்பட்டுள்ளதாக காரியாலயத்திற்கு பொறுப்பான அதிகாரி செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.