பேலியகொடை பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஒரு கிலோகிராம் கொக்கெய்ன், 24.5 கிலோகிராம் ‘ஆஷ்’ மற்றும் 8 கிலோ ‘குஷ்’ ஆகிய ஆபத்தான போதைப் பொருள்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் ஒரு ஜீப் மற்றும் முச்சக்கர வண்டி மற்றும் ரூ. 3 மில்லியன் ரூபா பணம் என்பன பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
பேலியகொட- நீர்கொழும்பு வீதியில் அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு அருகில் கடமையாற்றிய பேலியகொட பொலிஸாருக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப் மற்றும் முச்சக்கர வண்டியில் சில பொருட்களை ஏற்றிச் செல்வதை அவதானித்த பொலிஸார் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
அதிகாரிகள் வாகனங்களைச் சென்று சோதனையிட்டபோது, ஜீப் மற்றும் மூன்று சக்கர வாகனத்தில் மூன்று பெட்டிகள் மற்றும் 4 பயணப்பொதிகளில் போதைப்பொருள் அடைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட போது, சந்தேக நபர்கள் இலஞ்சம் கொடுக்க முயன்றதாக பொலிசார் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற பொறுப்பான அதிகாரிக்கு 3 மில்லியன் வரை பேரம் பேசப்பட்ட போதிலும் அதனை மறுத்த பொலிஸார் போதைப்பொருள், வாகனங்கள் மற்றும் பணத்துடன் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 33, 34 மற்றும் 49 வயதுடைய வத்தளை மற்றும் நத்தஹண்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.
இச்சம்பவம் தொடர்பில் பேலியகொட பொலிஸார் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.