ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டக்களப்புக்குக் கடந்த செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதி வந்த வேளை அவருக்கு எதிராகத் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினர் எனத் தெரிவித்து மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் எம்.பிக்கள் உட்பட 30 பேருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கின் உத்தரவை எதிர்வரும் ஜனவரி 24ஆம் திகதிக்கு ஒத்திவைத்த ஏறாவூர் நீதிவான், எதிராளிகள் அனைவரையும் கைது மற்றும் பிணையில் விடுவித்தல் போன்ற நடவடிக்கை எதற்கும் உட்படுத்தாமல் விடுவித்தார்.
மேலும், இந்த விடயத்தில் 35 பேருக்கு எதிராக நடவடிக்கையைப் பொலிஸார் ஆரம்பத்தில் முன்னெடுத்தனர். எனினும்இ இரா.சாணக்கியன் எம்.பி. உட்பட ஐவரைத் தவிர்த்து 30 பேருக்கு எதிராகவே இப்போது வழக்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.