3 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் ஆழ்ந்த தாழமுக்கம்

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த தாழமுக்கம் இன்னும் 3 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது நாகப்பட்டினத்திற்குக் கிழக்கேயும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 320 கிலோமீற்றர் தொலைவிலும், சென்னைக்குத் தென்கிழக்கே 340 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.

மேலும், ஆழ்ந்த தாழமுக்கம் காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே நாளை சனிக்கிழமை பிற்பகல் புயலாகக் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.