பாகிஸ்தானிலிருந்து லாகூரில் இருந்து 8 பொதிகளில் அடைக்கப்பட்டு அனுப்பப்பட்ட 27 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் 3 பேரை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கொழும்பு-05 பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபர் ஒருவர் உட்பட 3 பேர் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் லாகூரில் இருந்து இந்த ஹெரோயின் போதைப்பொருள்இ ஓமன் எயார்லைன் விமானம் மூலம் கடந்த 10ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமான சரக்கு முனையத்திற்கு பாகிஸ்தானில் உற்பத்தி செய்யப்பட்ட “துவாய்” என்று அடையாளப்படுத்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு-05 பகுதியைச் சேர்ந்த நபர் ஹெரோயின் போதைப் பொருள் பார்சல்களை பெற்றுக்கொள்வதற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமான சரக்கு முனையத்திற்கு வந்துள்ளார். இதன்போது, குறித்த நபர் முன்னிலையில் 8 பார்சல்களும் திறந்து சோதனையிட்டபோதுஇ அதில் 10 கிலோ 500 கிராம் நிறை கொண்ட ஹெராயின் போதைப் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.