பிலியந்தலை பிரதேசத்தில் இன்று ஞாயிற்று கிழமை தன் காதலியுடன் ஏற்பட்ட முரண்பாட்டில் காதலன் ஒருவர் தனது காதலியைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துள்ளார்.
ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்த ஜே.எம். ஆயிஷா லக்மினி (வயது – 26) என்ற யுவதியே கொலை செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான காதலனுடன் கொல்லப்பட்ட யுவதி மூன்று வருடங்களுக்கு முன்னர் காதல் உறவில் இருந்த நிலையில், மூன்று மாதங்களாகத் தனது காதலனைத் தவிர்த்து வந்துள்ளார். இந் நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தர்க்கத்தினால் குறித்த யுவதி கொல்லப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.