2500 டிப்ளோமா பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள்

கல்வியியற் கல்லூரிகளில் டிப்ளோமா பாடநெறியை நிறைவு செய்த, மேல் மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளுக்கான 2,500 ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாசலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் 16ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் அலரி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஏனைய மாகாண பாடசாலைகளுக்கான நியமனக் கடிதங்கள் அந்தந்த மாகாண கல்விக் காரியாலயங்களில் வழங்கப்படும்.

அதேவேளை, ஏனைய மாகாண பாடசாலைகளுக்கான நியமனக் கடிதங்கள் அந்தந்த மாகாண கல்விக் காரியாலயங்களில் வழங்கப்படும் எனவும் இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்வியமைச்சு தற்போது மேற்கொண்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாசலம் அரவிந்தகுமார் அறிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்