25 ஆண்டுகளுக்குப் பிறகு சுவீடனில் அதிக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
நோர்டிக் பிராந்தியத்தில் இரண்டாவது நாளாக வெப்பநிலை -40 டிகிரி செல்சியஸுக்குக் கீழே குறைந்துள்ளது.
கடும் பனிப்பொழிவு காரணமாக பல வீடுகள் பனியில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடும் பனிப்பொழிவு காரணமாக சுமார் ஆயிரம் வாகனங்கள் நெடுஞ்சாலையில் 24 மணி நேரமாக தேங்கி நிற்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு சுவீடனில் ஒரே இரவில் -25-35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், வாரம் முழுவதும் குளிர் காலநிலையும் காணப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
நெடுஞ்சாலையில் சிக்கிய கார்களில் இருந்தவர்களை பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.