நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ், இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 12.30 உடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 877 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 04 பேர் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், கைதானவர்களில் போதைப்பொருட்களுக்கு அடிமையான 14 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பணியகம் மற்றும் விசேட பணியகத்தினால் தேடப்படும் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள 28 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, 475 கிராம் ஹெரோயின், 501 கிராம் ஐஸ் ரக போதைப்பொருள், 126 போதைமாத்திரைகள் மற்றும் 3,605 கஞ்சா செடிகள் உள்ளிட்ட பல போதைப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.