
24 மணித்தியாலங்களில் 533 பேர் கைது
நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில், இன்று திங்கட்கிழமை அதிகாலை 12.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 533 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப் பொருள் உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து 273 கிராம் ஹெரோயின், 102 கிராம் ஐஸ், 1.778 கிலோ கிராம் கேரள கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
