-மூதூர் நிருபர்-
திருகோணமலையின் தொன்மை வாய்ந்த நூற்றாண்டுகள் தாண்டி அருள்பாளிக்கும் மடத்தடி ஶ்ரீ கிருஷ்ணண் ஆலயத்தின் ருக்மணி தாயார் ஶ்ரீ சத்திய பாமா தாயார் சமேத ஶ்ரீ கிருஷ்ண பகவான் ஆலய திருமூர்திகளுக்கு தூபிஷ்தானம் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதன்போது திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் உட்பட அதிகளவான சைவ பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.
இதேவேளை ஏற்கனவே கோவில் கட்டுமானப் பணிகளுக்கு 9 இலட்ச ரூபாய் நாடாளுமன்ற உறுப்பினர் குகதாசன் வழங்கியிருந்தமை குறிப்பிடதக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்