ரத்தொழுவ குடியிருப்பு தொகுதியில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கொக்கெய்ன் மற்றும் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து அவரிடமிருந்து 26 கிராம் கொக்கெய்ன் மற்றும் 2250 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.