ஹொரணை பகுதியில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்ததுடன் விபத்தை ஏற்படுத்திய சாரதி கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
ஹொரணை, பல்லபிட்டிய பிரதேசத்தில் பயணித்த இரண்டு தனியார் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் சாரதியை அப்பிரதேச மக்கள் தாக்கியதையடுத்து பொலிஸார் தலையிட்டு சாரதியை மீட்டு கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
விபத்தில் இரு பெண்கள் உட்பட 6 பேர் படுகாயமடைந்த நிலையில் அம்புயூலன்ஸ் மூலம் ஹொரணை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.