மட்டு குருக்கள்மடம் பகுதியில் பெண்ணின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் கடற்கரையிலிருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

இவ்விடையம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குருக்கள்மடம் கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக பொலிசாருக்குக் கிடைத்த தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிசார் சடலத்தை மீட்டுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் எனவும், குறித்த நபவர் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

மேலும் நீதிமன்ற உத்தரரவைப் பெற்று சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதோடு, சடலத்தை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை நாடுவதாகவும் பொலிசார் இதன்போது தெரிவித்தனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்