பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் களனிப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குழு ஒன்று நடத்திய ஆய்வில் இலங்கையில் 10 முதல் 24 வயதுக்குட்பட்ட 39% இளைஞர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஜெர்மனியில் உள்ள சமூக மனநலம் மற்றும் மனநோய் தொற்றுநோயியல் பற்றி மதிப்பிடும் சஞ்சிகையினால் வெளியிடப்பட்ட இந்த ஆய்வுஇ நாட்டில் உள்ள மனநலப் பிரச்சினையின் ஆபத்தான புள்ளிவிவரங்களை வெளிப்படுத்தியுள்ளது.
பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் களனிப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழு 20 வருட காலப்பகுதியில் 52,000 இலங்கையர்களை உட்படுத்தி 33 ஆய்வுகளை மதிப்பீடு செய்தது.
ஆராய்ச்சி முடிவுகளின்படி, மொத்த இலங்கை சனத்தொகையில் 19.4% பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மற்ற ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் மனஅழுத்தத்தின் பரவலானது குறிப்பிடத்தக்க வகையில் அதிகமாக உள்ளது.
2003 முதல் 2023 வரை நீடித்த இந்த ஆய்வு, 52,778 நபர்களைக் கொண்ட விரிவான பங்கேற்பாளர் குழுவை உள்ளடக்கிய 33 மதிப்பாய்வு செய்யப்பட்ட அவதானிப்பு ஆய்வுகளின் தரவை உள்ளடக்கியது.
10 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே மனஅழுத்தம் அதிகமாக இருப்பது ஆய்வின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும்.
அதிர்ச்சியூட்டும் வகையில், இலங்கையில் ஏறத்தாழ 39% இளைஞர்கள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீங்கள் இவ்வாறு மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக உணர்ந்தால் உதவி தேவைப்படும் எந்தவொரு நபரும் தேசிய மனநல ஹெல்ப்லைன் 1926 ஐ அழைக்கலாம்