திம்புள்ள பத்தனை கொட்டகலை பிரதேசத்தில் நேற்று சனி கிழமை பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் மோதுண்டு இளம் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.
ஹட்டன் குடாஓயா பிரதேசத்தை சேர்ந்த 18 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும் குறித்த யுவதியின் மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திம்புள்ள – பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
