வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அதிகரிக்கப்பட்ட 1,700 ரூபாய் வேதனம் தமக்கு வழங்கப்படவில்லை எனவும் நேற்றைய தினம் திங்கட்கிழமை வழங்கப்பட்ட மாதாந்த வேதனத்தை சில பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஏற்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அரசிற்கு சொந்தமான மாத்தளை – எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனம் தமது தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் நாளாந்த வேதனம் என்ற அடிப்படையில் நேற்றைய தினம் மாதாந்த வேதனத்தை வழங்கியிருந்ததாக அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சில தனியார் பெருந்தோட்ட நிறுவனங்களும் அதிகரிக்கப்பட்ட வேதனத்தை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் ஜனவசம எனப்படும் மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான பெருந்தோட்டங்களின் தொழிலாளர்களுக்கும் அதிகரிக்கப்பட்ட 1,700 ரூபாய் வேதனம் வழங்கப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.
இதேவேளை வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் தமக்கான வேதனம் அதிகரிக்கப்படாவிடின் எதிர்வரும் காலங்களில் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தாழ்நில பெருந்தோட்ட தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்