வனாத்தவில்லுவ பகுதியில் 16 வயது பாடசாலை மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
எழுவன்குளம் – ரால்மடுவ பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த மாணவி நேற்று திங்கட்கிழமை மாலை மேலதிக வகுப்பிற்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகநபர் தனது கையை பிடித்து இழுத்து முகத்தில் முத்தமிட்டதாக குறித்த மாணவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
முறைப்பாட்டின் படி, சந்தேக நபரை கைது செய்துள்ள வனாத்தவில்லுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.