பிங்கிரிய பகுதியில் தனது சகோதரியை கர்ப்பமாக்கிய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
திஸ்ஸோகம, போகொடயகம பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய இளைஞன் ஒருவரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
16 வயது சிறுமி கர்ப்பமாக இருப்பதாகவும், அவர் தனது சகோதரனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பதாகவும் பொலிஸ் அவசர பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன்படி, பொலிசார் குறிப்பிட்ட சிறுமியை சந்தித்து வாக்குமூலம் பெற்றனர்.
அதன்படி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தனது சகோதரன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறிய சிறுமி, தான் தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். அவரது வாக்குமூலத்தின்படி, சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகி கர்ப்பமடைந்த சிறுமி மருத்துவ சிகிச்சைக்காக குளியாபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிங்கிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்