இந்தோனேசியா 16 வயது சிறுவனை 41 வயது பெண் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்தோனேசியா கலிமந்தன் மாகாணத்தை சேர்ந்தவர் லிசா (வயது – 37) என்பவருக்கு கெவின் என்ற 16 வயதுடைய மகன் உள்ளார். சிறு வயதிலிருந்தே அதே பகுதியில் வசிக்கும் லிசாவின் நெருங்கிய தோழியான மரியானா (வயது – 41) என்ற பெண்ணின் கடைக்கு கெவின் தின்பண்டங்கள் வாங்க அடிக்கடி சென்றுள்ளார்.
இவர்கள் இருவரின் வீடும் சில அடி தூரத்தில்தான் இருந்துள்ளது. அப்போதிலிருந்தே மரியானாவுக்கு இந்த சிறுவனின் மீது காதல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சிறுவனும் மரியானாவும் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இதை தொடர்ந்து இந்த திருமணத்தில் மகன் கெவின் தன்னை விட 25 வயது மூத்த மரியானாவை மணந்தது மகிழ்ச்சியாக உள்ளது என்று சிறுவனின் தாயார் தெரிவித்துள்ளார்.
அவர்கள் இருவரும் ஜோடியாக நிற்கும் புகைப்படத்தை தாயார் லிசா பகிர்ந்துள்ளார். இந்த திருமணத்திற்கு கெவின் சம்மதம் தெரிவித்ததாகவும், மரியானவொடு இருக்கும் சொத்துக்களுக்காக தனது மகனை திருமணம் செய்யது வைத்தார் என்று வெளியான தகவல்களை வதந்தி என்றும் லிசா உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இவர்கள் இருவரின் திருமணமும் 4ஆவது நாளில் பிரித்து வைக்கப்பட்டுள்ளது. திருமணம் குறித்த செய்தி வைரலான நிலையில், இது பொதுமக்களிடையே பெரும் பேசு பொருளானது.
மேற்கு கலிமந்தனில் உள்ள இந்தோனேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கவனத்திற்கு இது தெரியவந்துள்ளது.
இந்தோனேசியாவில் ஒரு ஆண் மற்றும் பெண் 21 வயதை அடையும்போது பெற்றோரின் அனுமதி இல்லாமல் திருமணம் செய்து கொள்ளலாம் என்பது சட்டம். ஆகவே இந்த வழக்கில் சிறுவனை திருமணம் செய்ததிற்காக மரியானா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட நிலையில் பயந்து போன சிறுவனின் தாயார் மரியானவை விவாகரத்து செய்து விடுமாறு மகனிடம் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
