வெல்லவாய புதுருவாகலை பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய மாணவி தனது 16 வயது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இருவரும் ஒரே பாடசாலையில் கல்வி கற்கும் 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் எனவும் காதல் உறவு குறித்து சிறுமியின் தாயார் எச்சரித்ததையடுத்து சிறுமி, செல்லபாவ பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய தனது காதலனுடன் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து மாணவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.