கந்தேகெதர பகுதியில் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் பதுளை பொலிஸ் பிரிவின் 16ஆவது பொலிஸ் நிலையம் நேற்று சனிக்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் விசேட அதிதியாக துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன, பதுளை மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் டி.வி.பி. அஜித் ஹெசிரி, பண்டாரவளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் கலுபான, பதுளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வேதமுல்ல, சொரணதொட்ட பிரதேச செயலாளர் திருமதி நிமேஷா பிரியங்கானி மற்றும் பலர் கலந்துகொண்டிருந்தனர்.