கொழும்பு தேசிய வைத்தியசாலையின் எண்டோஸ்கோப்பி பரிசோதனைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் தலைமைச் செயலாளர் எஸ்.பி.மடிவத்த கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.