8 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு இலவச காலணிகள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
குறித்த திட்டம் எதிர்வரும் ஆண்டுகளில் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அமைச்சரவையின் அங்கீகாரமும், திறைசேரியின் ஆதரவும் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பாடசாலை மாணவர்களின் மதிய உணவுக்காக சர்வதேச உதவிகளை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் தெரிவித்தார்.