குடிநீர் கட்டணம் 15 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
மேலும் உண்டியல்கள் மூலம் அறவிடப்பட வேண்டிய நிலுவைத் தொகை 12 பில்லியன் ரூபா எனவும் நீர் கட்டணத்தை உடனடியாக செலுத்துவதன் மூலம் தேவையற்ற துண்டிப்புகளை தவிர்க்க முடியும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.