ihகம பகுதியில் சிறுவன் ஒருவரை வாளால் தாக்கி விரலை துண்டித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் சம்பவம் இடம்பெற்று 11 நாட்களாக தலைமறைவாகியிருந்த நிலையில், நேற்று திங்கட்கிழமை பொலிஸாரிடம் சரணடைந்தார்.
இதனையடுத்துஇ அவர் வெலிசறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 4ஆம் திகதி இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக மாறிய நிலையில், 14 வயதுடைய சிறுவனை சந்தேகநபர் வாளால் தாக்கியுள்ளார்.
இதன்போதுஇ சிறுவனின் இடது கையின் ஒரு விரல் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலில் காயமடைந்த குறித்த சிறுவன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.