வவுனியா பகுதியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை சட்டவிரோதமான முறையில் கடத்திச் செல்லபட்ட மாடுகளுடன் இருவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
மடுக்கந்தை பகுதியில் இருந்து இன்று காலை 5 மணியளவில் வவுனியா நகர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சிறியரக லொறி ஒன்றினை வழிமறித்த விசேட அதிரடிப்படையினர் அதில் சோதனைகளை முன்னெடுத்த போது அனுமதிப்பத்திரம் இல்லாமல் மாடுகள் கடத்திச் செல்லப்பட்டமை தெரியவந்தது.
இதனையடுத்து, குறித்த வாகனத்தில் இருந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவற்றை கடத்திச் செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட லொறியும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும் வாகனத்தில் இருந்து 8 பசு மாடுகள் உட்பட 14 மாடுகள் பொலிசாரால் மீட்கப்பட்டதுடன், கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.