நோர்வூட் சென் ஜோன் டிலரி மற்றும் கிளங்கன் ஆகிய பகுதிகளில் இன்று காலை பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 14 தோட்டத் தொழிலாளர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, சென்ஜோன் டிலரி பகுதியில் 10 பேரும், நோர்வூட் மற்றும் கிளங்கன் பகுதிகளில் 4 பேரும் குளவிக்கொட்டுக்கு இலக்காகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.