யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் நேற்று புதன் கிழமை தேசிய சிறுவர் பாதுகாப்பு பிரிவினர் மாணவர்களுக்கு சிறுவர் பாதுகாப்பு தொடர்பிலான விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்றினை நடாத்தி இருந்தனர்.
இந்த கருத்தரங்கின் போது, 13 வயதான மாணவிகள் இருவர் இலவச வகுப்புக்களை நடாத்தி வந்த நபர் ஒருவர் தம்மை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தெரிவித்ததை அடுத்து குறித்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்யதுள்ளனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.