எப்பாவல நகரிலுள்ள விடுதி ஒன்றில் 13, வயதுடைய இரு சிறுவர்களுடன் தங்கியிருந்த 51 வயதுடைய விளையாட்டு ஆசிரியர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
கடந்த 27ஆம் திகதி அனுராதபுரம் பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற வலைப்பந்தாட்டப் பயிற்சிக்காக தனது பாடசாலையில் 8ஆம் தரத்தில் கல்வி கற்கும் 13 வயது சிறுவர்களை அழைத்துச் செல்வதாக குறித்த ஆசிரியர் பெற்றோரிடம் கூறியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இரண்டு பிள்ளைகளையும் வீட்டுக்கு அனுப்பாத குறித்த நபர் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து சந்தேகத்திற்குரிய ஆசிரியர் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.