-பதுளை நிருபர்-
பசறை, கோணக்கலை காவத்த தோட்டத்தில் 13 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரை பசறை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
பசறை கோணக்கலை காவத்தை தோட்டத்தை சேர்ந்த 27 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 17 ஆம் திகதி தனது வீட்டிற்கு அருகில் உள்ள வாகனம் பழுது பார்க்கும் இடத்தில் பணிபுரியும் சந்தேக நபர், குறித்த மாணவன் கடைக்கு சென்று வீடு திரும்புகையில் மாணவனை தனது வாகனம் பழுது பார்க்கு இடத்துக்கு அழைத்து இந்த பாடசாலை மாணவனுக்கு பலவந்தமாக மது அருந்த கொடுத்து கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் குறித்த மாணவன் தற்போது பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை, பெற்று வருவதாகவும் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு தெரிவித்துள்ளது.
கைதுசெய்த நபரை விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது சந்தேக நபரை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்த மற்றும் பசறை உதவி பொலிஸ் அத்தியட்சகர் துலித் டி சில்வா ஆகியோரின் ஆலோசனையின் பேரில் பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஈ.எம். பியரட்ணவின் மேற்பார்வையிலன் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்