முல்லைத்தீவு குமுழமுனைப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு முன்னால் உள்ள மருந்தகம் ஒன்றில் கடந்த ஆண்டு இறுதிப்பகுதியில் சட்டவிரோத கருக்கலைப்பு இடம்பெற்றதாக நேற்று திங்கட்கிழமை முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
குமுழமுனைப்பகுதியில் தாயின் இரண்டாவது கணவனால் 13 வயது சிறுமியிடன் தகாத உறவு கொண்ட காரணத்தினால் சிறுமி கர்ப்பம் தரித்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு முன்னால் உள்ள மருந்தகம் ஒன்றில் சட்டவிரோத கரு கலைப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்களால் தொடரப்பட்ட முறைப்பாட்டினை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் வளர்ப்பு தந்தை, உடந்தையாக இருந்த தாயார் மற்றும் கருக்கலைப்பினை மேற்கொண்ட தனியார் மருந்தகம் உரிமையாளர் உள்ளிட்டவர்கள் பொலிஸார் கைது செய்துள்ளனர்.