-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை தம்பலகாமம் 96 ஆம் கட்டை பகுதியில் வீட்டில் கிணறு தோண்டுவதைப் போன்று நாடகமாடி புதையல் தோண்டிக் கொண்டிருந்த இரண்டு சந்தேக நபர்கள் நேற்று புதன் கிழமை மாலை எஸ் ஐ எஸ் என்று அழைக்கப்படும் அரச புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக கந்தளாய் பிராந்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
முள்ளிப்பொத்தானை சாலியபுர பகுதியைச் சேர்ந்த 55 மற்றும் 60 வயதுடையவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கல் துளைக்கும் இயந்திரம் மற்றும் சில ஆயுதப் பொருட்கள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தளாய் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை சந்தேக நபர்களை ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.




