-கிண்ணியா நிருபர்-
தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவில் சர்வதேச சுற்றாடல் தினத்தையொட்டி மரநடுகை மற்றும் சிரமதான நிகழ்வு இன்று வியாழக்கிழமை கல்மெட்டியாவ வடக்கு கிராம அலுவலர் பிரிவில் இடம்பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதியின் வழிகாட்டுதளுக்கிணங்க இடம் பெற்ற குறித்த நிகழ்வில் பசுமையான மரங்களும் நட்டு வைக்கப்பட்டன.
இயற்கை வளமான மரநடுகை மூலமாக சுற்றாடலை பாதுகாக்கும் நோக்கில் இது நாடு பூராகவும் இடம் பெற்று வருகின்றன.
இதில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
