இன்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ வீட்டு சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 300 ரூபாவிற்கும் அதிக தொகையில் குறைக்கப்பட உள்ளதாக லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித்த பீரிஸ் அறிவித்துள்ளார்.
உலக சந்தையில் எரிவாயு விலை குறைவடைந்துள்ளமை மற்றும் ரூபாவின் பெறுமதி மீளவும் வலுப்பெற்றுள்ளமை உள்ளிட்ட விடயங்களைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற.
விலை குறைப்பு தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் இன்று விடுக்கப்படவுள்ளது.
இதேவேளை, லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலைத்திருத்தம் தொடர்பில், நிறுவனத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர்களிடம் கலந்துரையாடி நாளைய தினம் திங்கட்கிழமை விலைத்திருத்தம் தொடர்பில் அறிவிக்கப்படும் என நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.