நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம், மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தை விடவும் உயரக்கூடும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று அதிகூடிய வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என,எச்சரிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொது மக்களை போதியளவு நீர் அருந்துமாறும், இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வயோதிபர்கள், நோயாளர்கள் வெப்பம் தொடர்பில் மிகுந்த அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது .