ஜப்பானிற்கு உரிய லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஆர்ட் கலரியில் வைக்கப்பட்டிருந்த 12.5 கோடி ரூபாய் மதிப்புக்கொண்டதும் பல நூற்றாண்டு காலம் பழமையானதுமான வெண்கலத்தால் ஆக்கப்பட்ட புத்தர் சிலை திருடப்பட்டுள்ளது.
ஏறத்தாழ 250 பவுண்டுகள் அதாவது 114 கிலோ ஏடைகொண்ட இந்த வெண்கல சிற்பமானது கடந்த செப்டம்பர் மாதம் 18 ஆம் திகதியன்று அதிகாலை 3:45 மணியளவில் ஒரு தனி நபரால் திட்டமிட்டு துல்லியமாக கடத்தப்படும் காணொளி அங்குள்ள கமெராவில் பதிவாகியுள்ளது.
ஜப்பானின் எடோ காலத்தில் (1603-1867) உருவாக்கப்பட்ட, இந்த சிலையானது 4 அடி உயரமுடைய ஒளிவட்டத்துடன் கூடிய அமர்ந்த புத்தர் சிலையாகும்.
இது ஒரு அரிய கலைப்பொக்கிஷமாக திகழ்கிறது, இது ஒரு கோவிலின் மையப்பகுதிக்காக நிர்மாணிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
இந்த நினைவுச்சின்னமான வெண்கலச் சிற்பம் ஒரு காலத்தில் கோயிலின் உட்புறத்தில் ஆதிக்கம் செலுத்தியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
கல்வெட்டுக்களிலிருந்து ஆராயும்போது, ஒரு காலத்தில் யூடோ-நோ-சான் கோவிலில் வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இது போன்ற ஒரு அழகிய புத்தர் சிலையை ஒத்த சிலை உலகில் வேறெங்கும் இல்லை என்றும், 4 அடி உயரம், வெண்கல வெற்று வார்ப்பு, மற்றும் பார்ப்பதற்கு ஒரு அரிய காட்சியாக இருக்கும் இந்த சிலையை எங்கும் காண இயலாது என்பதால் திருடியவர்களால் அதனை விற்பது கடினம் என்றும் இதன் தனித்துவமான பண்புகளின் காரணமாக இதனை திருடியவர்களிடம் இருந்து எளிதில் மீட்க முடியும் என்றும் ஆர்ட் கலரி உரிமையாளர்கள் கூறுகின்றனர்.