அத்தனகல்ல பகுதியில் தனது 11 வயது மகளை மூன்று வருடங்களாக துஷ்பிரயோகம் செய்த தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுமியின் தாயார் சில வருடங்களுக்கு முன்னர் பிரிந்து சென்ற நிலையில் சந்தேகநபரின் இரண்டாவது மனைவி குழந்தையைக் கவனித்து வந்துள்ளார். மேலும் குறித்த பெண்ணுக்கு தெரிந்தே துஷ்பிரயோகம் தொடர்வது தெரியவந்ததால் அவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் பெண் சந்தேகநபர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.