நாட்டில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 14 வயதுக்குட்பட்ட 105 சிறுவர்கள் தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழுநோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் தொழுநோயாளிகள் சிகிச்சை பெற கூடிய ஒரே வைத்தியசாலை கொழும்பு தேசிய வைத்தியசாலை எனவும் வார நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையும், சனிக்கிழமைகளில் காலை 8 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற முடியும் என தொழுநோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.