களுத்துறை இங்கிரிய பிரதேசத்தில் 100 ரூபாய் தருவதாகக் கூறி 11 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்தில் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு அண்மையில் உள்ள அவரது பெற்றோரின் வீட்டில் தற்காலிகமாக தங்கியிருந்த 67 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த 11 வயது சிறுமிக்கு 100 ரூபா தருவதாக சந்தேக நபர் கூறியுள்ளதுடன் சிறுமி அதை வாங்க மறுத்துள்ளமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இங்கிரிய பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.