களுத்துறை – இங்கிரிய பகுதியில் 11 வயது சிறுமி ஒருவரை 100 ரூபாய் பணம் தருவதாக தெரிவித்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் களுத்துறை – இங்கிரிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அம்பாறையை சேர்ந்த 67 வயதுடைய முதியவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவர் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு அண்மையில் தற்காலிகமாக வசித்து வருவதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.