அமெரிக்காவில் லுகேமியா எனப்படும் ரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்ட பத்து வயது சிறுமிஇ தான் இறப்பதற்கு சில நாட்கள் முன்பு தனக்கு மிகவும் பிடித்தமான நண்பரை திருமணம் செய்துக்கொண்டார்.
எம்மா எட்வர்ட்ஸ் என்னும் 10 வயது சிறுமிக்கு உயிரைக் குடிக்கும் ரத்தப் புற்று நோய் இருப்பது கடந்த ஆண்டு மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. சிறுமி நோயிலிருந்து மீண்டு வந்து விடுவார் என அவரின் பெற்றோர்கள் அலினா மற்றும் ஆரோன் எட்வர்ட்ஸ் ஆகியோர் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் நாளுக்கு நாள் அவருடைய உடல் நிலை மிகவும் மோசமாகிக் கொண்டே வந்தது.
கடந்த ஜூன் மாதம் எம்மாவின் உடல் நிலை மிகவும் மோசமாகி விட்டதாகவும், அவரை காப்பாற்றுவது கடினம் என்றும், சிறுமி இன்னும் சில நாட்கள் மட்டுமே உயிரோடு இருப்பார் என்றும் மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
மாற்று சிகிச்சை அளித்து சிறுமியை காப்பாற்றி விடலாம் என நம்பிக்கையோடு காத்திருந்த பெற்றோருக்கு ஏமாற்றமே இறுதியில் எஞ்சிய நிலையில் தனது மகளின் கடைசி நாட்களில் அவருக்கு எதாவது ஒரு சந்தோஷத்தை கொடுக்க வேண்டும் என நினைத்த பெற்றோர், சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
அதற்கான ஏற்பாடுகளை இரண்டே நாட்களில் செய்த பெற்றோர் சிறுமி எம்மாவுக்கு மிகவும் பிடித்த நண்பனான டானியேல் மார்ஷல் கிறிஸ்டோபர் என்ற சிறுவனை மணமகனாக்க முடிவு செய்தனர்.
அதன்படி கடந்த ஜூன் 29 ஆம் திகதி திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு, நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என 100 பேர் அழைக்கப்பட்டனர். அவர்கள் முன்னிலையில் டானியேல் எம்மாவை திருமணம் செய்து கொண்டார்.
தனக்கு மருமகனான டானியேல் உண்மையிலேயே மிகவும் அருமையான குணம் கொண்ட, எம்மாவை மிகவும் நேசித்த சிறுவன் என்கிறார் எம்மாவின் தாய் அலினா.
திருமணம் முடிந்து பன்னிரெண்டு நாட்களில் சிறுமி எம்மா உயிரிழந்தார். 2022 ஆம் ஆண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வரை எம்மா நல்ல ஆரோக்கியத்துடன் இருந்ததாகவும், மருத்துவப் பரிசோதனையில் சிறுமியின் கால் எலும்பில் கேன்சர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மேலும், குழந்தைகளுக்கு இது போன்ற புற்றுநோய் வருவது சாதாரணம் தான் என்றும், அதை குணப்படுத்தி விடலாம்என்றும் மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆனால் இந்து லுகேமியா என்கிற ரத்தப் புற்றுநோயின் செல்கள் சிறுமியின் ரத்தம், எலும்பு மஞ்கைள் என வளர்ந்து உயிரையே எடுக்கும் என பெற்றோரும் மருத்துவர்களும் எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள்.